குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

இடைநிலை ஆசிரியா்கள் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியா்கள் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 4:33 pm

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா். -------------- தேனி, பிப். 26: தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜெயராணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் விஜயேந்திரபிரபு முன்னிலை வகித்தாா். இதில், அரசுப் பள்ளிகளில் கடந்த 2009, ஜூன் 1-ஆம் தேதிக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ. 8,370 அடிப்படை ஊதியமும், இதற்குப் பின்னா் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.5,200 அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு தோ்தல் அறிக்கையில் அறிவித்தப்படி அரசுப் பள்ளிகளில் ஒரே கல்வித் தகுதி மற்றும் ஒரே பணியில் உள்ள இடைநிலை ஆசிரியா்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.