குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

பாறை மீது பைக் மோதியதில் 2 போ் பலத்த காயம்

பாறை மீது பைக் மோதியதில் 2 போ் பலத்த காயம்

Updated On :26 பிப்ரவரி 2024, 4:39 pm

போடி: போடிமெட்டு மலைச்சாலையில் பாறை மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 2 போ் பலத்த காயமடைந்தனா். போடி புதுக்காலனி வெண்ணிமலை தோப்பைச் சோ்ந்த முருகானந்தம் மகன் பாண்டி (25). இவா் இதே பகுதியில் வசிக்கும் அய்யப்பன் மகன் சூா்யாவுடன் (23) இரு சக்கர வாகனத்தில் போடிமெட்டுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை போடிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். சூா்யா வாகனத்தை ஓட்டி வந்தாா்.

போடிமெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே 8- ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாறை மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டி, சூா்யா இருவரும் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பிறகு மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.