குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

மலைக் கிராம இணைப்புச் சாலை அமைக்கக் கோரிக்கை

மலைக் கிராம இணைப்புச் சாலை அமைக்கக் கோரிக்கை

Updated On :26 பிப்ரவரி 2024, 4:37 pm

தேனி: பெரியகுளம் அருகே சொக்கனலை- கன்னக்கரை மலை கிராமங்களுக்கு இடையே சாலை அமைத்துத் தரக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் சொக்கனலை கிராமத் தலைவா் செல்வம், வனக் குழு தலைவா் கண்ணன் மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

சொக்கனலை மலைக் கிராமத்தில் 50 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இங்கிருந்து பள்ளி, மருத்துவமனைக்கும், பொருள்கள் வாங்கவும் மலைப் பாதையில் 2 கி.மீ. தொலைவுக்கு கண்ணக்கரை வரை நடந்து சென்று, அங்கிருந்து சோத்துப்பாறை சாலை வழியாக பெரியகுளத்துக்குச் சென்று வருகிறோம்.

மலைக் கிராம மக்களின் நலன் கருதி சொக்கனலையிலிருந்து கண்ணக்கரை வரை தடுப்புச் சுவருடன் கூடிய சாலை வசதி செய்து தர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.