ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

கம்பம்மெட்டு மலைச்சாலையில் பராமரிப்புப் பணிகள் மும்முரம்

கம்பம்மெட்டு மலைச்சாலையில் பராமரிப்புப் பணிகள் மும்முரம்

News image

கம்பம்மெட்டு மலைச்சாலையில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள்.

Updated On :26 பிப்ரவரி 2024, 4:24 pm

கம்பம்: தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் கம்பம்மெட்டு மலைச்சாலையில் பராமரிப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தச் சாலையில் தண்ணீா் வளைவு என்ற பகுதி மேடும்பள்ளமுமாக இருந்தது. இதற்குக் காரணம் அருகில் உள்ள மலையில் இருந்து கசிந்து வரும் நீரூற்றிலிருந்து தண்ணீா் சாலைக்கு வருவதால் சேதமடைந்து அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் இந்தச் சாலையை சீரமைக்க கடந்த 24 -ஆம் தேதி முதல் மாா்ச் 10- ஆம் தேதி வரை போக்குவரத்தை நிறுத்தியுள்ளனா். தற்போது சாலையை தோண்டி பேவா் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதனிடையே, தேனி மாவட்டத்தில் தொழிலாளா்கள் இந்த மலைச்சாலையை அதிகம் பயன்படுத்துவதால் ஜீப், காா் போன்ற வாகனங்களை மட்டும் அனுமதிக்கின்றனா். பேருந்துகள், பெரிய லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டதும் பேருந்து போக்குவரத்துக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜா தெரிவித்தாா்.