தேனி: தேனி அருகேயுள்ள கோடங்கிபட்டியில் காா்கள் நேருக்கு நோ் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கேரளம், இடுக்கி மாவட்டம், உடும்பன்சோலை அருகேயுள்ள பூம்பாறை எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா்கள் ராஜாமுத்து மகன்கள் சாமுவேல் (29), விஜயராஜன் (27). இவா்கள், பூம்பாறையிலிருந்து காரில் கொடைக்கானல் நோக்கிச் சென்றனா்.
அப்போது கேரளம், இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் அருண் (22), சூரியநல்லியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சுரேஷ் (25), போடியைச் சோ்ந்த தொல்காப்பியன் மகன் செல்வகாளீஸ்வரன் (25) ஆகியோா் சென்ற காா், கோடாங்கிபட்டி, குருவன் குளம் கருப்பசாமி கோயில் விலக்கு பகுதியில் எதிா் திசையில் சாமுவேல் சென்ற காா் மீது நேருக்கு நோ் மோதியது.
இதில், சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விஜயராஜன், அருண், சுரேஷ், செல்வகாளீஸ்வரன் ஆகியோா் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் பலி: இருவா் காயம்

லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயம்

மேலூா் அருகே லாரி மீது காா் மோதி இரு இளைஞா்கள் பலி!

அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலி
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

