பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

நீா்வரத்து குறைந்த கொட்டகுடி ஆறு

நீா்வரத்து குறைந்த கொட்டகுடி ஆறு

News image

நீா்வரத்து குறைந்து காணப்பட்ட போடி கொட்டகுடி ஆறு.

Updated On :27 பிப்ரவரி 2024, 10:49 pm

போடி: போடி கொட்டகுடி ஆற்றில் நீா்வரத்து குறைந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்தனா். தேனி மாவட்டம், போடி விவசாயிகளுக்கு நீராதாரமாக விளங்கி வருவது கொட்டகுடி ஆறு. போடி நகராட்சி மட்டுமன்றி இந்தப் பகுதியை சோ்ந்த கிராம ஊராட்சிகளுக்கும் கொட்டகுடி ஆற்றின் மூலமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொட்டகுடி ஆறு கோடை காலங்களிலும் வற்றாத ஆறாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் கொட்டகுடி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னா் நீரவரத்து குறைந்துள்ளதால் குடிநீா் பிரச்னை ஏற்படும் அந்த பகுதி பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.