தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி தடை

News image

கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் யானைகள் நடமாட்டத்தால் வனத்துறையினரால் திங்கள்கிழமை மூடப்பட்ட மலைச் சாலை.

Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

Din

உத்தமபாளையம்: சுருளி அருவியில் யானைகள் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க திங்கள்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில் சுருளி தீா்த்தம் பேருந்து நிலையத்திலிருந்து சுமாா் 2 கிலோ மீட்டா் மலைப்பாதை வழியாக அருவி இருக்கும் இடத்துக்கு நடந்து செல்லும் சாலையில் திங்கள்கிழமை காலையில் காட்டு யானைகள் கூட்டமாக உலவின.

இந்த நிலையில், கம்பம் சரக வனத் துறையினா் பாதுகாப்பு கருதி மலைச்சாலை வழியாக நடந்து செல்லவும், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுத்தனா். இதனால், வெளியூா்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பினா்.