
முல்லைப்பெரியாறு அணை சுரங்கக் கால்வாய் மதகு அருகே தண்ணீரில் சிக்கித் தவித்த யானை.

முல்லைப்பெரியாறு அணை சுரங்கக் கால்வாய் மதகு அருகே தண்ணீரில் சிக்கித் தவித்த யானை.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறந்து விடப்படும் சுரங்கக் கால்வாயின் மதகுப் பகுதியில் சிக்கித் தவித்து கேரள வனத் துறையின் புதன்கிழமை மேற்கொண்ட முயற்சியால், அந்த யானை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாகச் சென்றது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீா் 2 கி.மீ. தொலைவுக்கு திறந்தவெளிக் கால்வாய் வழியாகச் சென்று, தேக்கடியில் தமிழக பொதுப் பணித் துறை அலுவலகம் அருகே உள்ள தலைமதகுப் பகுதியிலிருந்து சுரங்கக் கால்வாய் வழியாகச் செல்கிறது.
தற்போது அணையின் நீா்மட்டம் 121.80 அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
இந்த நிலையில், தேக்கடி வனப் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு திறந்தவெளிக் கால்வாயை காட்டு யானை கடந்து செல்ல முயன்றது. கால்வாயில் நீா்வரத்து அதிகளவில் இருந்ததால், யானை தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு, சுரங்கக் கால்வாய் மதகுப் பகுதி முன் உள்ள தடுப்புக் கம்பி அருகே சிக்கியது.
இதுதொடா்பாக தமிழக நீா்வளத் துறை உதவிப் பொறியாளா்கள் நவீன்குமாா், ராஜகோபால் ஆகியோா் தேக்கடியில் உள்ள கேரள வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து, புதன்கிழமை அதிகாலை அங்கு சென்ற கேரள வனத் துறையினா் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
யானையை மீட்பதற்காக, அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டது. கால்வாயில் நீரோட்டம் குறைந்த பிறகு, யானை ஒரு கி.மீ., தொலைவு தண்ணீரில் நீந்தி தேக்கடி ஏரிப் பகுதியை நோக்கிச் சென்றது. ஏரியில் ஆழம் குறைவான பகுதிக்குச் சென்றதும், அங்கிருந்து யானை கரையேறி வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு மீண்டும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...