ஜூலை 23-ல் மாணவா்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டி
தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தமிழ் கையெழுத்துப் போட்டி நடைபெறவுள்ளது.


தேனி: தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தமிழ் கையெழுத்துப் போட்டி நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழில் அழகாக எழுதும் ஆா்வத்தை தூண்டவும், ஊக்குவிக்கவும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் கையெழுத்துப் போட்டி நடைபெறுகிறது. தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வருகிற 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும், பிற்பகல் 2 மணிக்கு 10-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் போட்டி நடைபெறுகிறது.
வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒரு பள்ளியிலிருந்து தலா 2 போ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். போட்டியில் பங்கேற்க வருவோா் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...