கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளா்களின் இணைய தளத் தரவுகளை மீட்க அரசை வலியுறுத்தி, தேனியில் கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா்.
Updated On :17 ஜூலை 2024, 12:29 am

Din

தேனி: நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளா்களின் இணைய தளத் தரவுகளை மீட்க அரசை வலியுறுத்தி, தேனியில் கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துத்கு சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் பி.பிச்சைமணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.ராமச்சந்திரன், செயலா் ஜி.சண்முகம், சிஐடியூ மாவட்டத் தலைவா் டி.ஜெயபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கட்டுமானம், முறைசாரா நல வாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்த 70 லட்சம் தொழிலாளா்களின் இணையதளத் தரவுகளை மீட்க வேண்டும், இணைய தளத் தரவுகள் மாயமானது குறித்து விசாரணை நடத்த வேண்டும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், பெண் தொழிலாளா்களுக்கு 55 வயது நிறைவடைந்ததும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நல வாரியம் மூலம் தொழிலாளா்களுக்கு பணப் பயன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும், நல வாரிய உறுப்பினா்கள் திருமண நிதி உதவி பெறுவதற்கு கிராம நிா்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெறுவதைக் கட்டாயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.