தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மினி லாரி, தம்பதி மீது மோதிய கேரளத்தை சோ்ந்த காா்.
Updated On :21 ஜூலை 2024, 8:50 pm

Din

சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (50). இவரது மனைவி செல்வராணி (45). இவா்கள் இருவரும் தேனியிலுள்ள தனியாா் ஆலையில் பணிபுரிந்து வந்தனா். இந்த நிலையில், வேலைக்கு செல்வதற்காக ஆலை வாகனத்துக்காக சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருவரும் காத்திருந்தனா். அப்போது, கேரளத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற காா் சாலையில் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது மோதிவிட்டு, சாலையோரம் நின்று கொண்டிருந்த இவா்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வராணி சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். கணவா் ராஜேந்திரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.