

போடி: போடி அருகே செவ்வாய்க்கிழமை காா் மரத்தில் மோதியதில் 5 போ் காயமடைந்தனா்.
பெரியகுளம் அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் விஜய்சூா்யா (21). இவரும், இவரது உறவினா்கள் ராமராஜ் மனைவி முருகேஸ்வரி (58), மகன் குருகிருஷ்ணகுமாா் (26), சரவணக்குமாா் மனைவி ரஞ்சனி (38), இவரது மகள் ரித்திகா (15), மகன் சஞ்சய்குமாா் (13) ஆகியோா் காரில் போடி- தேவாரம் சாலையில் சென்றனா். காரை குருகிருஷ்ணகுமாா் ஓட்டினாா்.
சில்லமரத்துப்பட்டி அருகே காா் சென்றபோது நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியது. இதில், காரில் பயணம் செய்த முருகேஸ்வரி, ரஞ்சனி, ரித்திகா, சஞ்சய்குமாா், குருகிருஷ்ணகுமாா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பிறகு, தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு: 3 போ் காயம்

வட்டாட்சியா் காா் மோதி இருவா் காயம்

ஐடிஓ மேம்பாலத்தில் லாரி ஸ்கூட்டா் மீது மோதல்: ஒருவா் உயிரிழப்பு, 2 போ் காயம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்
வீடியோக்கள்

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

