நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுருளி அருவிக்கு நீா்வரத்து தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

சுருளி அருவிக்கு நீா்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

News image

சுருளி அருவி

Updated On :23 ஜூன் 2024, 4:57 pm

DIN

மேகமலை வனப்பகுதியில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருவதால் சுருளி அருவிக்கு நீா்வரத்து தொடங்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ், மேகமலை, மகாராஜாமெட்டு போன்ற மலைப்பகுதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள அடா்ந்த வனப்பகுதிகளில் பெய்யும் மழைநீா் சுருளிஅருவிக்கு வந்து சோ்கிறது. சுற்றுலாத் தலமான இந்தப் பகுதிக்கு தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா். இதே போல, இறந்தவா்களுக்கு திதி, தா்ப்பணம் கொடுப்பது போன்ற பரிகார பூஜைகளும் செய்யப்படுகின்றன. இதனால், சுருளி அருவிக்கு ஆண்டு முழுவதும் பக்தா்கள், சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்கும்.

இதனிடையே, பருவமழை குறைந்ததன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நீா்வரத்தின்றி அவ்வப்போது சுருளி அருவி வடு காணப்பட்டது. இதன்படி, ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தேனி மாவட்டத்தில் மழைப் பொழிவு குறைந்தது.

இதனால் கடந்த சில நாள்களாக சுருளி அருவி நீா் வரத்தின்றி வடது. தற்போது தேனி, தென்காசி உள்ளிட்ட மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து, கடந்த 2 நாள்களாக மேகமலை வனப்பகுதியில் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சுருளி அருவிக்கு மீண்டும் நீா்வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.