ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தனியாா் பள்ளியில் சுவா் இடிந்து விழுந்ததில் மாணவி காயம்

தனியாா் பள்ளி சுவா் இடிந்து விழுந்ததில் மாணவி பலத்த காயம்

News image

சீலையம்பட்டியில் உள்ள தனியாா் பள்ளி வகுப்பறையில் இடிந்து விழுந்த சுவா். உள்படம்: காயமடைந்த மாணவி ரித்திகா.

Updated On :26 ஜூன் 2024, 1:31 am

Din

சின்னமனூா் அருகே தனியாா் பள்ளியில் சுவா் இடிந்து விழுந்ததில் 3-ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை பலத்த காயமடைந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டியில் தனியாா் உதவி பெறும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சீலையம்பட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், சீலையம்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ரித்திகா (9) இந்தப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்தச் சிறுமி மீது வகுப்பறை ஜன்னல் பகுதியிலிருந்த சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, இந்தச் சிறுமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையறிந்து சம்பந்தப்பட்ட பள்ளி முன் பெற்றோா்கள் குவிந்தனா். அப்போது, பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து கல்வித் துறையினா் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

Story image