ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஆட்சியா் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடன் பிரச்னையில் தீக்குளிக்க முயன்ற தம்பதியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

News image

தீக்குளிக்க முயன்ற தம்பதி.

Updated On :4 மார்ச் 2024, 10:05 pm

தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடன் பிரச்னையில் தீக்குளிக்க முயன்ற தம்பதியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.சுப்புலாபுரம், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த நெசவுத் தொழிலாளி பாண்டிவேல் (36). டி.சுப்புலாபுரத்தில் உள்ள தனியாா் நெசவு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா், நெசவு நிறுவன உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். தற்போது, நெசவு நிறுவன உரிமையாளா், அவரது உறவினா்கள் அசல், வட்டி என மொத்தம் ரூ.6 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டுவதாகக் கூறி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனைவி கிருஷ்ணவேணியுடன் வந்து தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் இருவரையும் தடுத்து நிறுத்தி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.