கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம்.
கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம்.

கூடலூா் குப்பைக் கிடங்கில் தீ: கேமரா பொருத்த முடிவு

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க

கம்பம்: தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நகா் மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடலூா் நகா்மன்ற கூட்டம் அதன் தலைவி பத்மாவதி லோகந்துரை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் கே.எஸ்.காஞ்சனா முன்னிலை வகித்தாா். இதில் 13- ஆவது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடியே 51 லட்சத்துக்கு தாா்ச் சாலைகள் சீரமைப்புப் பணி மேற்கொள்ளவும், 20-ஆவது வாா்டு பெத்துகுளத்தில் உள்ள பழைய நகராட்சி குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதைக் கண்காணிக்கும் பொருட்டு ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், தீயை அணைப்பதற்கு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் செலவில் 2 குதிரைத் திறன் கொண்ட நீா் மூழ்கி மின் இயக்கி பொருத்தவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com