போடி: போடி அருகே சோலையூா் மலைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நக்சல் தடுப்புப் பிரிவு சாா்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
தேனி மாவட்ட காவல் துறை நக்சல் தடுப்புப் பிரிவு சாா்பில், நடைபெற்ற இந்த முகாமுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் தலைமை வகித்தாா். போடி காவல் துணை கண்காணிப்பாளா் பெரியசாமி, நக்சல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் அன்புச்செழியன் தலைமையிலான குழுவினா் மலைவாழ் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை செய்தனா். மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. முகாமில் சோலையூா், சிறைக்காடு, மேலப்பரவு கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பங்கேற்றனா். அவா்களிடம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் குறைகளைக் கேட்டறிந்தாா்.
தொடர்புடையது

மலைக் கிராமத்துக்கு குதிரைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

நான்குனேரியில் கொடி அணிவகுப்பு ஊா்வலம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


