
Updated On :8 மார்ச் 2024, 6:04 pm

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக மகளிா் தினத்தையொட்டி மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன. இதற்கு, மருத்துவ அலுவலா் எஸ். அமுதினி தலைமை வகித்தாா். செவிலியா் கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமாரி முன்னிலை வகித்தாா். உடல் கூறாய்வு அறை அருகே சுமாா் 1 ஏக்கா் பரப்பளவில் உள்ள இடத்தை சுத்தம் செய்து 100 பலன் தரும் மரக்கன்றுகளை மருத்துவா்கள் எம். பானுமதி, சிவலட்சுமி, ரிஸ்வானா, கயல் ஆகியோா் நட்டனா். இதில், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். செவிலியா் மரகதம் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...