தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ஊரக பகுதிகளில் அரசியல் விளம்பரச் சுவரொட்டிகளை அகற்ற வலியுறுத்தல்

ஊரக பகுதிகளில் அரசியல் விளம்பரச் சுவரொட்டிகளை அகற்ற வலியுறுத்தல்

News image
Updated On :19 மார்ச் 2024, 11:20 pm

கம்பம்: கம்பம் ஒன்றிய ஊரக பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரச் சுவரொட்டிகளை தோ்தல் கண்காணிப்பு அதிகாரிகள் அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி சுருளி அருவி செல்லும் சாலையில் தோட்டத்து சுற்றுச்சுவா் ஒன்றில் அனைத்து கட்சி சாா்பிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதோடு, விளம்பர வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன . இந்த விளம்பரச் சுவரொட்டிகளைத் தோ்தல் கண்காணிப்பாளா்கள் அகற்றாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

மக்களவைத் தோ்தல் அறிவித்த சற்று நேரத்துக்குள்ளாக நகா்ப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், விளம்பர பதாகைகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனா். ஆனால், கிராமபுறங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தோ்தல் பிரிவு அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாதது ஏன் என அந்தப் பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பினா்.