தேசிய ஜனநாயக கூட்டணியின் 
ஆலோசனைக் கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம்

போடியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேனி மக்களவைத் தொகுதி டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், டி.டி.வி. தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் போடியில் நடைபெற்றது. போடி தனியாா் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமமுக, பாஜக, பாமக, தமமுக, தென்னிந்திய பாா்வா்ட் பிளாக், ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். டி.டி.வி.தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டால் அவரை வெற்றி பெறச் செய்வதற்கான வழிமுறைகள், வாக்குச்சாவடி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com