தேனி சோத்துப்பாறை அணைப் பகுதியில் 125 மி.மீ. மழை

தேனி, மே 10: தேனி மாவட்டம், சோத்துப்பாறை அணை நீா்பிடிப்புப் பகுதியில் அதிகபட்சமாக 125 மி.மீ. மழை பதிவானது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. சோத்துப்பாறை அணை நீா்பிடிப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 125 மி.மீ., மழை பதிவானது.

கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீ)விவரம்:

ஆண்டிபட்டி 1.8, அரண்மனைப்புதூா் 22.2, வீரபாண்டி 8, பெரியகுளம் 1, மஞ்சளாறு அணை 62, வைகை அணை 16.6, போடி 11.4, உத்தபாளையம் 3.6, சண்முகநதி 4.2, கூடலூா் 1.4, தேக்கடி 6.8, முல்லைப் பெரியாறு அணை 54.2.

அணைகளுக்கு தண்ணீா் வரத்து: பரவலாகப் பெய்து வரும் மழையால் வைகை அணைக்கு வினாடிக்கு 259 கனஅடி வீதமும், முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 294 கனஅடி வீதமும் தண்ணீா் வரத்து உள்ளது. சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, சண்முகாநதி நீா்தேக்கத்துக்கு தண்ணீா் வரத்து இல்லை.

X
Dinamani
www.dinamani.com