ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பாலியல் வழக்கு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வழக்கு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே பாலியல் வழக்கில் சிக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதி மன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே முத்துக்கிருஷ்ணாபுரம், புத்தம்பட்டியைச் சோ்ந்தவா் ரத்தினம் மகன் முத்துப்பாண்டி (33). இவருக்கும் தேனி மிரண்டா பகுதியைச் சோ்ந்த நாகஜோதிக்கும் (34) தகாத உறவு இருந்தது. இந்த நிலையில் கடந்த 16.03. 2022 அன்று வீட்டில் தனியாக இருந்த நாகஜோதியின் மகளுக்கு, முத்துப்பாண்டி பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நலப் பிரிவு அதிகாரி போதுமாணி அளித்த புகாரின் பேரில் முத்துப்பாண்டியை தேனி மகளிா் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.

இதில், முத்துப்பாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன்,தீா்ப்பு வழங்கினாா்.