அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
உடையாா்பாளையத்தை அடுத்த சுத்தமல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் கதிரவன்(26). இவா், கடந்த 16.9,2024 அன்று 16 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா்அளித்த புகாரின்பேரில் உடையாா்பாளையம் காவல் துறையினா் கதிரவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளி கதிரவனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவா் உத்தரவிட்டாா். இதையடுத்து கதிரவன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ம. ராஜா ஆஜரானாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

புளியங்குடியில் உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


