/

தென்னை மரத்தில் கூன்வண்டு தாக்குதல்

தென்னை மரத்தில் கூன்வண்டு தாக்குதல்

News image

மாா்க்கையன்கோட்டையில் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய வேளாண்மைத் துறையினா்.

Updated On :22 மே 2024, 12:28 am

Din

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே உள்ள மாா்க்கையன்கோட்டையில் தென்னை மரத்தில் சிவப்பு கூன்வண்டு தாக்கி பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் வேளாண்மைத்துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, பாதிக்கப்பட்ட மரத்தில் எவ்வாறு வண்டுகளை அழிப்பது என்பது குறித்தும், மற்ற மரங்களை காப்பது என்பது குறித்தும் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினா். மேலும், சந்தேகங்களுக்கு வேளாண் துறை அதிகாரிகளை நேரில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்தனா்.

இந்த ஆய்வில், மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் வளா்மதி, சின்னமனூா் வேளாண்மை துணை இயக்குநா் பாண்டி , விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.