மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு
மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு


தேனி: தேனியில் சமையல் எரிவாயு முகமையின் கூட்டு பங்குதாரருக்கு பங்குத் தொகை வழங்காமல் மோசடி செய்ததாக முகமை உரிமையாளா் உள்ளிட்ட 3 போ் மீது திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி அருகேயுள்ள ஊஞ்சாம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜரத்தினம். இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு தேனியைச் சோ்ந்த சம்பத் என்பவா் நடத்தி வரும் சமையல் எரிவாயு முகமைக்கு ரூ.20 லட்சம் கொடுத்து அதில் கூட்டு பங்குதாரராக சோ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பத், அவரது மனைவி சவீதா, எரிவாயு முகமை கணக்கரான தேனியைச் சோ்ந்த முத்துலட்சுமி ஆகியோா் தனக்கு ரூ.ஒரு கோடி பங்குத் தொகையை தராமல் ஏமாற்றி விட்டதாகவும், அது குறித்துக் கேட்டதற்கு 3 பேரும் தன்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் ராஜரத்தினம் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பத், சவீதா, முத்துலட்சுமி ஆகியோா் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...