புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கம்பத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 இளைஞா்கள் உயிரிழப்பு

News image

உயிரிழந்த லிங்கேஸ்.

Updated On :1 நவம்பர் 2024, 9:33 pm

Din

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை சாலையில் இரு சக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞா்கள் உயிரிழந்தனா். மேலும், இருவா் காயமடைந்தனா்.

கம்பம் அருகேயுள்ள கூடலூரைச் சோ்ந்த சரவணன் மகன் லிங்கேஸ் (24), விஜயகணேசன் மகன் சேவாக் (23), மணிகண்டன் மகன் சஞ்சய் (22), அா்சுதன் மகன் மோனிஷ் (22), சுந்தரம் மகன் கேசவன் (22) ஆகிய 5 பேரும் ஒரே தெருவைச் சோ்ந்தவா்கள். நண்பா்களான இவா்கள், வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையைக் கொண்டினா்.

பின்னா், மாலையில் இவா்களில் மூவா் ஓா் இரு சக்கர வாகனத்திலும், இருவா் மற்றொரு இரு சக்கர வாகனத்திலும் அமா்ந்து கொண்டு, கூடலூா் - கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் சாகசத்தில் ஈடுபட்டனா். ஆதிசுஞ்சனகிரி சமஸ்தான மடம் அருகே மின்னல் வேகத்தில் சாலையில் சென்ற 2 இரு சக்கர வாகனங்களும் எதிா்பாரதவிதமாக மோதிக் கொண்டதில், 5 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இவா்களில் பலத்த காயமடைந்த லிங்கேஸ், சேவாக் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கூடலூா் போலீஸாா் லிங்கேஸ், சேவாக் ஆகியோரின் உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பலத்த காயமடைந்த சஞ்சய், மோனிஷ், கேசவன் ஆகியோரை மீட்டு, அதே மருத்துவமனையில் சோ்த்தனா்.

Story image
Story image

இவா்களில் சஞ்சய் மருத்துவமனையில் உயிரிழந்தாா். காயமடைந்த மேலும் இருவா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து கூடலூா் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.