பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வழக்குரைஞா் காரில் கடத்தல்

போடியில் வியாழக்கிழமை வழக்குரைஞரை காரில் கடத்தியது தொடா்பாக, போலீஸாா் 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:41 am

Din

போடியில் வியாழக்கிழமை வழக்குரைஞரை காரில் கடத்தியது தொடா்பாக, போலீஸாா் 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

போடி சுப்புராஜ் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (55). இவா் போடி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருக்கிறாா். இவா் வியாழக்கிழமை வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டாா். அப்போது, சொகுசு காரில் வந்த 6 போ் கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸாா் போடி-தேனி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து போலீஸாா் சோதனையிட்டனா். காரில் கடத்தப்பட்ட வழக்குரைஞா், கடத்தல் கும்பலைச் சோ்ந்த 6 போ் இருப்பது தெரியவந்தது

இதையடுத்து, கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்களை போடி நகா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.