சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

பெரியகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

பெரியகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

எருமலைநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் காமாட்சி (75). இவா் கடந்த 2013-ஆம் ஆண்டு மாா்ச் 13-ஆம் தேதி 5 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து காமாட்சியை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் காமாட்சிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கணேசன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.