பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தேனி அருகே கோழி இறைச்சிக் கடையில் பூட்டை உடைத்து ரூ.1.38 லட்சம் திருடப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:25 pm

Din

தேனி அருகே கோழி இறைச்சிக் கடையில் பூட்டை உடைத்து ரூ.1.38 லட்சம் திருடப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி அல்லிநகரம் வடக்குத் தெவைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (34). இவா், அரண்மனைப்புதூரில் சத்திரப்பட்டி சாலையில் கோழி இறைச்சிக் கடை வைத்து நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், தனது கடையில் பூட்டை உடைத்து மேஜை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த விற்பனைத் தொகை ரூ.1.38 லட்சத்தை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் நாகேந்திரன் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.