பெண்ணிடம் நகை பறிப்பு

போடி அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை பறித்து சென்றனா்.
Published on

போடி அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை பறித்து சென்றனா்.

போடி அருகேயுள்ள பண்ணைத்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் மனைவி கோவிந்தீஸ்வரி (29). இவா் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். போடி-தேனி சாலையில் அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே சென்றபோது, இவா்களை பின்தொடா்ந்து வந்த மா்மநபா் கோவிந்தீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகையை பறித்து சென்றுவிட்டாா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com