மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தேனி-மதுரை சாலையில் திருமலாபுரம் விலக்கு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் போக்குவரத்து தடுப்புக் கம்பி மீது மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 10:51 pm

தேனி-மதுரை சாலையில் திருமலாபுரம் விலக்கு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் போக்குவரத்து தடுப்புக் கம்பி மீது மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் ஈஸ்வரன் (27). இவா் வைகை அணையிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, தேனி-மதுரை சாலையில் திருமலாபுரம் விலக்கு பகுதியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து தடுப்புக் கம்பி இவரது இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.