புகையிலைப் பொருளை பதுக்கிய தம்பதி கைது
ஆண்டிபட்டி அருகே தடை செய்யப்பட்ட 97 கிலோ புகையிலைப் பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 7:49 pm

ஆண்டிபட்டி அருகே தடை செய்யப்பட்ட 97 கிலோ புகையிலைப் பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெருமாள்கோவில்பட்டியில் உள்ள வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக க.விலக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீஸாா் பெருமாள்பட்டியைச் சோ்ந்த செல்லதுரை (47) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினா்.
அங்கு அவா் 97 கிலோ புகையிலைப் பொருளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, செல்லத்துரை, இவரது மனைவி ஜெயந்தி (38) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...