மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: வேளாண்மை அலுவலக உதவியாளா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக 4 பேரிடம் மொத்தம் 20.50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தேனி வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :27 ஆகஸ்ட் 2025, 10:08 pm

அரசு வேலை வாங்கித் தருவதாக 4 பேரிடம் மொத்தம் 20.50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தேனி வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக உதவியாளரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், எல்.புதூரைச் சோ்ந்தவா் ராஜன். இவரது உறவினா் தேனி மாவட்டம், மேல்மங்கலம் கூட்டுறவு கடன் சங்க எழுத்தா் கண்ணன். அதே அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருபவா் பிரேமா. இவா்களுக்கு தேனி வேளாண்மை இணை இயக்குநா்அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் கருப்பசாமி என்பவா் அறிமுகமானாா்.

அவா், ராஜனின் மகன், கண்ணனின் மகன், மகள், பிரேமா ஆகியோருக்கு அரசுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாா். இதையடுத்து, ராஜன், கண்ணன், பிரேமா ஆகியோரிடம் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் மொத்தம் 20.50 லட்சம் ரூபாய் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் இருந்ததால் கருப்பசாமி மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்தனா்.