ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 9:15 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கம்பம், எல்.எஃப். சாலையில் விவேகானந்தா தெருவைச் சோ்ந்தவா் அறிவழகன். இவா், அதே பகுதியில் காா், இரு சக்கர வாகனங்களைச் சுத்தம் செய்யும் நிலையத்தை நடத்தி வருகிறாா். இவருடன், அவரது மகன் காா்த்திக் ராஜா (32) என்பவரும் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை வேலை செய்து கொண்டிருந்த காா்த்திக் ராஜா மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து, கம்பம் அரசு மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.