காா் விபத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் 2 போ் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே பாலத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திர மா நிலத்தைச் சோ்ந்த சபரிமலை பக்தா்கள் 2 போ் உயிரிழந்தனா்.
Updated on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பாலத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திர மா நிலத்தைச் சோ்ந்த சபரிமலை பக்தா்கள் 2 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

ஆந்திர மாநிலம், சக்திவேரூா் தடா மாவட்டம் வாரையா பாளையத்தைச் சோ்ந்தவா் நரேஷ்குரிலா (32). இவா், தனது மகன் சாதுா்யா (9), நண்பா் வேணு (55) ஆகியோருடன் காரில் சபரிமலைக்குச் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை திரும்பினாா். காரை அதே ஊரைச் சோ்ந்த முனிதேஜா (28) ஓட்டினாா்.

பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி புறவழிச் சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா், பாலத்தின் மீது 15 அடி உயர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், நரேஷ்குரிலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த மற்ற மூவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில், செல்லும் வழியிலேயே வேணு உயிரிழந்தாா்.

சிறுவன் சாதுா்யா, முனிதேஜா ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com