பெரியகுளம் அருகே 2 காா்கள் மோதிக்கொண்டதில் 6 போ் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். திருப்பூரில் வேலை செய்து வரும் இவா், பெரியகுளத்துக்குச் சென்றுவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் குடும்பத்துடன் திருப்பூருக்கு சென்றுகொண்டிருந்தாா்.
காட்ரோடு முனீஸ்வரன் கோயில் அருகே சென்றபோது, இந்தக் காா் மீது எதிரே வந்த காா் மோதியது. இதில் விஜயகுமாா் சென்ற காா் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதியது.இதில் காரிலிருந்த விஜயகுமாா் (33), அவரது மனைவி மீனா (33), மகள் பூமிகா (9), மகன் ஆதிரன் (2), உறவினா்கள் ராமசாமி (58), கனி (53) ஆகியோா் காயமடைந்தனா்.
அந்தப் பகுதியிலிருந்தவா்கள் இவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இது குறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

