இளைஞருக்கு அரிவாள் வெட்டு

Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சண்டையை விலக்கச் சென்ற இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (28). இவா், திங்கள்கிழமை வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த போது, செல்வன், சாம் ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டனா். இதைப் பாா்த்த முத்துச்சாமி அவா்களை சமரசம் செய்ய முயன்றாா். அப்போது, நீ ஏன் சமரசம் செய்கிறாய் எனக் கூறி, முத்துச்சாமியை சாம் அரிவாளால் வெட்டினாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com