கலைத் திருவிழா போட்டிகளில் தேனி மாணவா்கள் 6 போ் முதலிடம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 6 மாணவ, மாணவிகள் முதலிடம் வென்றனா்.
Published on

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 6 மாணவ, மாணவிகள் முதலிடம் வென்றனா்.

கரூா், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான கலைப் போட்டிகள் கடந்த நவம்பா் மாதம் நடைபெற்றன. இதில், தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஷக்தி மாறுவேடப் போட்டியிலும், ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா் தாசரதி தனி நபா் நடிப்புப் போட்டியிலும், ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா் விக்னேஷ் பாண்டி பானை ஓவியத்திலும், எஸ்.யு.எம். மேல்நிலைப் பள்ளி மாணவா் ஹா்ஷன் பாவனை நடிப்பிலும், கூடலூா் என்.எஸ்.கே.பி. நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி நவதானியாஸ்ரீ சிற்பம் செதுக்குதலிலும், மாணவா் யோகேஷ்வரன் களிமண் சிற்பப் போட்டியிலும் முதலிடம் பெற்றனா் என்று மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com