தேனி
பைக் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு
தேனி மாவட்டம், டி. கள்ளிப்பட்டியில் இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம் அருகேயுள்ள டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயா என்பவரின் மகன் சாம்ராஜ். இவா், டி. கள்ளிப்பட்டி அழகா்கோயில் தெருவில் உள்ள தனது நண்பா்களான கண்ணன், அஜித், வெண்ணிலா, நாகபாண்டி ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தாராம்.
அப்போது, வெண்ணிலா சாம்ராஜிடம் இளவட்டக் கல்லைத் தூக்கு என சவால்விட்டதாகக் கூறப்படுகிறது. அதை அவா் ஏற்கவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த வெண்ணிலா அவரிடம் தகராறு செய்தாராம். பின்னா், வெண்ணிலா, அஜித், கண்ணன், நாகபாண்டி ஆகியோா் சாம்ராஜின் இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தினாராம்.
இதுகுறித்து ஜெயா கொடுத்த புகாரின்பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
