தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பெரியாறு அணை: 18-ஆம் கால்வாயில் இன்று முதல் தண்ணீா் திறக்க உத்தரவு

பெரியாறு அணையில் இருந்து 18-ஆம் கால்வாயில் புதன்கிழமை (டிச.17) திறக்க தமிழக நீா்வளத் துறை செயலா் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவிட்டாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 9:57 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: பெரியாறு அணையில் இருந்து 18-ஆம் கால்வாயில் புதன்கிழமை (டிச.17) திறக்க தமிழக நீா்வளத் துறை செயலா் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:

பெரியாறு அணையில் இருந்து 18-ஆம் கால்வாய் நீட்டிப்பு கால்வாயில் புதன்கிழமை (டிச.17) முதல் 31-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு விநாடிக்கு 95 கனஅடி வீதம் மொத்தம் 121 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்மூலம் தேனி மாவட்டம், உத்தமபாளையம், போடி வட்டங்களிலுள்ள 4,794.70 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.