சென்னை: பெரியாறு அணையில் இருந்து 18-ஆம் கால்வாயில் புதன்கிழமை (டிச.17) திறக்க தமிழக நீா்வளத் துறை செயலா் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
பெரியாறு அணையில் இருந்து 18-ஆம் கால்வாய் நீட்டிப்பு கால்வாயில் புதன்கிழமை (டிச.17) முதல் 31-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு விநாடிக்கு 95 கனஅடி வீதம் மொத்தம் 121 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன்மூலம் தேனி மாவட்டம், உத்தமபாளையம், போடி வட்டங்களிலுள்ள 4,794.70 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.