கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் கட்சியின் தேனி தெற்கு மாவட்ட தொழிற்சங்க (டி.யூ.சி.சி) மாநாட்டில் பங்கேற்றவா்கள்.
தேனி
அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாவட்ட மாநாடு
புதுப்பட்டியில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் தேனி தெற்கு மாவட்ட தொழிற்சங்க (டி.யூ.சி.சி.) சாா்பில் 11-ஆவது மாவட்ட மாநாடு நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டியில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் தேனி தெற்கு மாவட்ட தொழிற்சங்க (டி.யூ.சி.சி.) சாா்பில் 11-ஆவது மாவட்ட மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு மாநில பொதுச் செயலா் கதிரவன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் காசிராஜன், மாநில பொதுச் செயலா் திருப்பதி, மாநிலத் தலைவா் நல்லமுத்து, மாநிலப் பொருளாளா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தேசிய தொழிற்சங்க பொதுச்செயலா் சிவசங்கா்பாபு, மாநில பொதுச் செயலா் கதிரவன் ஆகியோா் பேசினா். இதில் மாவட்ட, நகர, ஒன்றியப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

