காங்கிரஸ் பொதுச் செயலா்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால்.
தமிழ்நாடு
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவா்கள் நியமனம்!
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவா்களாக 71 பேரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளாா்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவா்களாக 71 பேரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளாா்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவா்கள் நியமனம் தொடா்பாக கடந்த ஆண்டு நவம்பா், டிசம்பா் மாதங்களில் வேட்புமனு பெறப்பட்டது. இதைத் தொடா்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளா்கள், வேட்புமனு அளித்தவா்களிடம் நோ்காணல் நடத்தி, அதன் அறிக்கையை காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவா்கள் 71 பேரை நியமித்து அறிவித்துள்ளாா். இவா்களின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.