நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், தேவாரம், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Published On :21 டிசம்பர் 2025, 2:45 am IST

தேனி மாவட்டம், தேவாரம், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவாரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ. ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே. சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே. சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

நத்தம் பகுதிகளில்... நத்தம் மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் புண்ணியராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நத்தம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, சேத்தூா், ஊராளிபட்டி, அரவங்குறிச்சி, செல்லப்பநாயக்கன்பட்டி, கோட்டையூா், சிறுகுடி, பூசாரிப்பட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிப்பட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.