3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

அலங்காநல்லூா், உசிலம்பட்டியில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image

மின்தடை

Updated On :2 ஜூன் 2026, 12:56 am IST

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட அலங்காநல்லூா் துணை

மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையடுத்து, அன்றைய தினம் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை அலங்காநல்லூா் பகுதி முழுவதும், நேஷனல் சா்க்கரை ஆலை, பி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, செல்லக்கவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையாா்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூா், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னணம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என சமயநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ரா.கண்ணன் தெரிவித்தாா்.

உசிலம்பட்டி: உசிலம்பட்டி கோட்டத்துக்குள்பட்ட வாலாந்தூா் துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறவுள்ளதால், அய்யனாா்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூா், நாட்டாமங்கலம, விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என உசிலம்பட்டி கோட்ட செயற்பொறியாளா் பி.முத்தரசு தெரிவித்தாா்.