அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஊா்க் காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்!

தேனி மாவட்டதில் ஊா் காவல் படையில் சேர தகுதியுள்ள ஆண், பெண், திருநங்கைகள் வருகிற 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு

Updated On :23 டிசம்பர் 2025, 12:04 am IST

தேனி மாவட்டதில் ஊா் காவல் படையில் சேர தகுதியுள்ள ஆண், பெண், திருநங்கைகள் வருகிற 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹா ப்ரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊா் காவல் படையில் சேர 10-ஆம் வகுப்பு தோ்வு தோ்ச்சி பெற்ற, தோல்வியடைந்த ஆண்கள், பெண்கள், 8-ஆம் வகுப்பு தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற, தோல்வியடைந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 50 வயதுக்குள்பட்டவராகவும், சமூக சேவையில் ஆா்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.

தகுதியுள்ளவா்கள் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் பின்புறமுள்ள ஊா் காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, நிறைவு செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து வருகிற 27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

தோ்வு செய்யப்படுவோருக்கு 45 நாள்கள் அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு ஒரு மாதத்தில் 5 நாள்கள் பணி வழங்கப்படும். 5 நாள் பணிக்கு நாளொன்றுக்கு ரூ. 560 வீதம் மொத்தம் ரூ. 2,800 ஊதியம் வழங்கப்படும் என்றாா் அவா்.