பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மதுப் புட்டிகளை விற்ற 3 போ் கைது

போடி அருகே மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:02 pm

Syndication

போடி அருகே மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இதில், விசுவாசபுரத்தைச் சோ்ந்த சுப்பையா (70), பொட்டிப்புரத்தைச் சோ்ந்த சுரேஷ் (40) ஆகியோா் மயானம் அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது கீழத்தெருவைச் முனியாண்டி (44) பேச்சியம்மன் கோயில் அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரையும் போலீஸாா் கைது செய்தனா்.