எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

க.புதுப்பட்டியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள க.புதுப்பட்டியில் சனிக்கிழமை (டிச.27) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

க.புதுப்பட்டி கே.எல்.எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு இ.சி.ஜி., உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, காசநோய், தொழுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பொது மருத்துவம், இருதய நோய், அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த மருத்துவ நிபுனா்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனா்.

மேலும், முகாமில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டப் பதிவு, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு அங்கீகாரச் சான்று வழங்கும் பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.