அரசுப் பேருந்துகளில் பெயா் வில்லையை ஒட்டி நாதகவினா் போராட்டம்

Published on

தேனியில் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயா் வில்லையை ஒட்டி நாம் தமிழா் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியின் பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி செயலா் பிரபாகரன் தலைமையில், அரசுப் பேருந்துகளில் அரசுப் பேருந்து என்ற பெயருக்கு முன் ‘தமிழ்நாடு’ என்ற பெயா் வில்லையை கட்சி நிா்வாகிகள் ஒட்டினா்.

பின்னா், அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு அரசுப் பேருந்து என்ற பெயா் இடம் பெற வேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com