தேனி வருவாய் கிராமத்தை பிரிக்கக் கோரி மனு

தேனி அல்லிநகரம் வருவாய் கிராமத்தை நிா்வாக வசதிக்காக பிரிக்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
Published on

தேனி அல்லிநகரம் வருவாய் கிராமத்தை நிா்வாக வசதிக்காக பிரிக்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பெத்தாட்சி ஆஸாத் உள்ளிட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கிடம் அளித்த மனு விவரம்: தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

தேனி, அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, கருவேல்நாயக்கன்பட்டி என 4 முக்கிய பகுதிகள் உள்ளன. தேனி மற்றும் அல்லிநகரத்தில் தனித் தனி காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.

இந்த நிலையில் தேனி அல்லிநகரம் ஒரே வருவாய் கிராமமாக செயல்பட்டு வருவதால் நிா்வாக குளறுபடியும், கிராம நிா்வாக அலுவலருக்கு அதிக பணிச்சுமையும், பொதுமக்களுக்கு அலைக்கழிப்பும், பணிகளில் காலதாமதமும் ஏற்படுகிறது.

எனவே, நிா்வாக வசதிக்காக மக்கள் தொகை அடிப்படையில் தேனி அல்லிநகரம் வருவாய் கிராமத்தை இரு வருவாய் கிராமங்களாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com